எழுத்திலக்கணம்
தமிழ் இலக்கணம்
பகுதி அ - இலக்கணம்
BZ தமிழ் இலக்கணம்
எழுத்திலக்கணம்
சார்பெழுத்து :
1. சார்பெழுத்து என்றால் என்ன?
★ முதல் எழுத்துக்களை சார்ந்து தோன்றும் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் எனப்படும்.
2. சார்பெழுத்து எத்தனை வகைப்படும்?
இது பத்து வகைப்படும்.
1.உயிர்மெய்,
2. ஆய்தம்,
3. உயிரளபெடை,
4. ஒற்றளபெடை,
5.குற்றியலுகரம்,
6.குற்றியலிகரம்,
7. ஐகாரக்குறுக்கம்.
8. ஒளகாரக்குறுக்கம்,
9. மகரக்குறுக்கம்,
10. ஆய்தக்குறுக்கம்,
1. உயிர்மெய்
உயிர்மெய் 216:
உயிர்மெய் எழுத்து தோன்றுவதற்கு உயிரும் மெய்யும் (க்+அ =க)
அடிப்படையாக இருப்பதால் சார்பெழுத்தாகிறது.
2. ஆய்த எழுத்து :
1. ஃ வடிவில் இருக்கும். மூன்று புள்ளிகளை பெற்றிருப்பதால் முப்புள்ளி,
முப்பாற்புள்ளி என்ற பெயரையும் இட்டு வழங்குகின்றோம்.
2. ஆ, எ ஒரு சொல்லில் இடம்பெறுகின்ற போது தனக்குமுன் குற்றெழுத்தை தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் (க ச ட த ப ற) எழுத்துக்களையும் பெற்று நடுவில்தான் வரும். (எ.கா.) அஃது, எஃது
3. அளபெடை என்றால் என்ன?
செய்யுளின் ஓசை குறையும்போது அவ்விடத்தில் உள்ள எழுத்தோடு அதன் இணை எழுத்துக்களை சேர்த்து ஓசையை நிறைவு செய்வதற்கு அளபெடை எனப்பெயர்.
4. அளபெடை எத்தனை வகைப்படும்?
அளபெடை : 2 வகைப்படும் :
1. உயிரளபெடை,
2. ஒற்றளபெடை.
5. உயிரளபெடை என்றால் என்ன?
உயிரளபெடை உயிர் எழுத்தைக் கொண்டு ஓசையை நிறைவு
செய்தால் அதனை உயிரளபெடை என்பர்.
6. உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
இது 3 வகைப்படும். அவையாவன :
1. செய்யுளிசை அளபெடை (அ) இசைநிறை அளபெடை
2. சொல்லிசை அளபெடை ,
3. இன்னிசை அளபெடை ,
7. செய்யுளிசை அளபெடை (அ) இசைநிறை அளபெடை
செய்யுளின் ஓசையை நிறைவு செய்யும் பொருட்டு சொல்லின் முதல், இடை, கடை உள்ள உயிர் நெடில் எழுத்துக்கள் அளபெடுத்து வருவதை செய்யுளிசை அளபெடை (அ) இசைநிறை அளபெடை எனப்படும்.
8. செய்யுளிசை அளபெடை :
ஈரசை கொண்ட சீர்களில் மட்டுமே வரும். இடையில் குறில் வரலாம். முதலில் குறில் வந்தால் அடுத்து சேர்த்து பிரிக்கவும்.
9. இன்னிசை அளபெடை :
செய்யுளின் ஓசை குறையாத போதும் செவிக்கு இனிய இசையை தரும்பொருட்டு (உயிர் குறில் நெடிலாக) மேலும் அளபெடுதல் இன்னிசை அளபெடை என்பர். (உ.ம்) உண்பதும் (த்+உ) = உண்பதூம் = உ உயிர்குறில்) ஊ (நெடில்)
10. இன்னிசை அளபெடை எவ்விடங்களிள் வரும்?
இன்னிசை அளபெடை மூவசை கொண்ட சீர்களில் மட்டும் வரும்.
11. சொல்லிசை அளபெடை :
செய்யுளில் ஓசை குறையாத பொழுதும் (பெயர்ச்சொல்லை வினைச் சொல்லாக மாற்றும் பொருட்டு அளபெடுத்தலை சொல்லிசை அளபெடை என்பர். சொல்லிசை அளபெடை -இ- என்னும் எழுத்தில் முடிவு பெற்றிருக்கும். (உ ம்)கு, டி,த.ழி, இ
தமிழ் இலக்கணம்
பகுதி அ - இலக்கணம்
BZ Tamil ilakkanam
1. சார்பெழுத்து என்றால் என்ன?
2. சார்பெழுத்து எத்தனை வகைப்படும்?
3. அளபெடை என்றால் என்ன?
4. அளபெடை எத்தனை வகைப்படும்?
5. உயிரளபெடை என்றால் என்ன?
6. உயிரளபெடை எத்தனை வகைப்படும்?
7. செய்யுளிசை அளபெடை (அ) இசைநிறை அளபெடை
8. செய்யுளிசை அளபெடை
9. இன்னிசை அளபெடை
10. இன்னிசை அளபெடை எவ்விடங்களிள் வரும்?
11. சொல்லிசை அளபெடை
Comments
Post a Comment