எழுத்திலக்கணம்
தமிழ் இலக்கணம் பகுதி அ - இலக்கணம் BZ தமிழ் இலக்கணம் எழுத்திலக்கணம் சார்பெழுத்து : 1. சார்பெழுத்து என்றால் என்ன? ★ முதல் எழுத்துக்களை சார்ந்து தோன்றும் எழுத்துக்கள் சார்பெழுத்துக்கள் எனப்படும். 2. சார்பெழுத்து எத்தனை வகைப்படும்? இது பத்து வகைப்படும். 1.உயிர்மெய், 2. ஆய்தம், 3. உயிரளபெடை, 4. ஒற்றளபெடை, 5.குற்றியலுகரம், 6.குற்றியலிகரம், 7. ஐகாரக்குறுக்கம். 8. ஒளகாரக்குறுக்கம், 9. மகரக்குறுக்கம், 10. ஆய்தக்குறுக்கம், 1. உயிர்மெய் உயிர்மெய் 216: உயிர்மெய் எழுத்து தோன்றுவதற்கு உயிரும் மெய்யும் (க்+அ =க) அடிப்படையாக இருப்பதால் சார்பெழுத்தாகிறது. 2. ஆய்த எழுத்து : 1. ஃ வடிவில் இருக்கும். மூன்று புள்ளிகளை பெற்றிருப்பதால் முப்புள்ளி, முப்பாற்புள்ளி என்ற பெயரையும் இட்டு வழங்குகின்றோம். 2. ஆ, எ ஒரு சொல்லில் இடம்பெறுகின்ற போது தனக்குமுன் குற்றெழுத்தை தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் (க ச ட த ப ற) எழுத்துக்களையும் பெற்று நடுவில்தான் வரும். (எ.கா.) அஃது, எஃது 3. அளபெடை என்றால் என்ன? செய்யுளின் ஓசை குறையும்போது அவ்விடத்தில் ...